2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை

சிறார்களை யாசகத்தில் ஈடுபடுத்திய கும்பல் தலைமறைவு

Princiya Dixci   / 2016 நவம்பர் 28 , மு.ப. 09:35 - 0     - 106

எம்.செல்வராஜா

சிறார்களை ஈடுபடுத்தி யாசகம் பெற்றுக்கொள்ளும் அமைப்பு ரீதியிலான வேலைத்திட்டமொன்று, கதிர்காமத்தில் செயல்படுவது, பொஸிஸ் விசாரணைகளிலிருந்து வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கதிர்காமம் ஆலய சூழலை, நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) சுற்றிவளைத்த கதிர்காமம் பொலிஸார், யாத்திரிகளிடம் யாசகம் எடுத்துக்கொண்டிருந்த 10 சிறுமிகள் உள்ளடங்களாக 23 சிறார்களைக் கைதுசெய்துள்ளனர்.

கதிர்காமம் ஆலயங்களிலிருந்து, கதிர்காமப் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுகளின் அடிப்படையிலேயே, மேற்படி சுற்றிவலைப்பு இடம்பெற்றது.

கைதுசெய்யப்பட்ட சிறார்களிடம் விசாரணைகளை மேற்கொள்ளும் போது, அமைப்பு ரீதியில் நிறுவனமொன்று கதிர்காமத்தில் இயங்குவதாகவும் அவ் அமைப்பின் மூலமாகவே, சிறார்கள் யாசகத்தில் ஈடுபடுத்தப்படுவதாகவும், யாசகத்தில் பெற்றுக்கொள்ளும் பணம் முழுவதும், நிறுவனத்தில் ஒப்படைக்கப்பட வேண்டுமென்று தமக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாவும், அச்சிறார்கள் தெரிவித்தனர்.

இச்சிறார்கள் கைதுசெய்யப்பட்டதும், குறிப்பிட்ட அமைப்பு ரீதியிலான நிறுவனத்தினர் தலைமறைவாகியுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X