Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Freelancer / 2021 ஜூன் 20 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் உள்ள காட்டுப் பகுதிகளான நன்னி, கண்டல் காடு, மணல் ஆறு, சோள வெட்டுவான், தளவாய், படுகாடு, சாவாறு, கங்கை ஆற்றுப் பகுதிகளில் கசிப்பு உற்பத்தி நிலையங்கள் நேற்று முன்தினம் (18) சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
கிண்ணியா பொலிஸ் விஷேட புலனாய்வு பிரிவினர் கொடுத்த தகவலுக்கு அமைய குறித்த 8 கசிப்பு உற்பத்தி நிலையங்களும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
மேலும் கசிப்பு உற்பத்தி நிலையங்களில் கசிப்பு மற்றும் கோடாத் திரவமும் அடங்கிய 26 பரல்கள் மீட்கப்பட்டு, சுமார் 3,000 லீட்டர் கசிப்பு கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
மேலும் கசிப்பு உற்பத்தி நிலையங்கள் வைத்திருந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும், குறித்த கசிப்பு உற்பத்தி நிலையங்களில் 2,000 ரூபாய் நாள் கூலிக்கு பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி, கசிப்பு உற்பத்தி செய்ததாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
M
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
59 minute ago