Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Princiya Dixci / 2021 பெப்ரவரி 16 , பி.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட்
முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 20ஆவது திருத்தத்துக்கு வாக்களித்து, இந்த நாட்டுக்கும் முஸ்லிம்களுக்கும் பெரும் துரோகம் விளைவித்துள்ளனரென, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்றான் மஹ்ரூப் தெரிவித்தார்.
தோப்பூர் பாத்திமா மகளிர் கல்லூரிக்கு முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு, நேற்று (15) நடைபெற்றபோது, அந்நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் அவர் உரையாற்றுகையில், “முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக 20வது திருத்தத்துக்கு வாக்களித்தோம் என்று கூறிய உறுப்பினர்கள், ஆதரவு தெரிவித்தும் எதுவும் நடந்தபாடில்லையெனக“ கூறித்திரிவது வேடிக்கையாக உள்ளது.
“20ஆவது திருத்தத்துக்கு முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தமைக்கு றிஷாட்டும், ஹக்கீமும் சாட்டுக் காரணங்களைக் கூறித் தப்பிக்க முடியாது. நிச்சயமாக அவர்களது ஆசி இல்லாமல் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இத்திருத்தத்துக்கு வாக்களித்திருக்க முடியாது.
“இன்று கூட்டங்களைக் கூட்டி மக்களை ஏமாற்றி, அடுத்த மாகாண சபைத் தேர்தலுக்கும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கும் வாக்குகளை பெற நாடகமாடுகின்றனர். மக்களை ஏமாற்றத் தொடங்கியுள்ள இவர்களது இரண்டாவது இனிங்ஸ் எதிர்வரும் காலத்தில் மக்களிடத்தில் எடுபடாது.
“முஸ்லிம் கட்சிகளைச் சேர்ந்த அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் அணியில் போட்டியிட்டு, வெற்றிபெற்று, எதிர்க்கட்சித் தலைவருக்கும் துரோகம் செய்துள்ளனர்.
“பாராளுமன்ற உறுப்பினர்களான றிஷாட்டினதும், ஹக்கீமினது கட்சியை எதிர்காலத்தில் இணைத்துச் செயற்படும் விடையத்தில் எமது ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கின்றேன்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago