2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

2 வலம்புரி சங்குகளுடன் ஒருவர் கைது

Editorial   / 2022 பெப்ரவரி 07 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்


திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெய்தல் நகர் பகுதியில் வைத்து , இரண்டு வலன்புரிச் சங்குகளுடன் 43 வயதுடைய   நபர் ஒருவர்  ஞாயிற்றுக்கிழமை மாலை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மூதூர் - கட்டைபறிச்சான் இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் ,  விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து இராணுவப் புலனாய்வாளர்கள் வலன்புரிச் சங்குகளுடன்  ஒருவரை கைது செய்துள்ளனர்.

 

இந்த வலம்புரிச் சங்குகள், விற்பனை செய்யப்படுவதற்கு எடுத்துச் சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே இவை கைப்பற்றப்பட்டன என பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட இரண்டு வலம்புரிச் சங்குகளும் மூதூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதேவேளை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை மூதூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X