2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

17 தொற்றாளர்களால் வெறிச்சோடிய திருகோணமலை நகரம்

Princiya Dixci   / 2021 மார்ச் 15 , பி.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பைஷல் இஸ்மாயில், ஏ.எம். கீத் 

திருகோணமலை நகர பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வட்டார எல்லைக்குள் உட்பட்ட மூன்று வீதிகளில் கடந்த 4 நாட்களில் கொரேனா வைரஸ் தொற்றாளர்கள் 17 பேர் உறுதி செய்யப்பட்டனர் என நகர பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. 

இதனால், குறித்த பகுதிகளில் உள்ள 179 கடைகள், இன்றும் (15) நாளையும் (16) மூடப்பட்டுள்ளதுடன், அக்கடைகளில் பணிபுரியும் 343 பேருக்கு, என்.சி வீதியில் உள்ள பள்ளிவாசலில் நேற்று பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் நகர பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்தது. 

சனிக்கிழமை எழுந்தமாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் 19 கடைகளைச் சேர்ந்த 17 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளதை அடுத்து, கடைகளை தற்காலிகமாக மூடுமாறு சுகாதாரப் பிரிவினரால் கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதை தொடர்ந்து மேற்படி கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .