2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை

ஹபாயா விவகாரம் ; அதிபருக்கு அழைப்பாணை

Freelancer   / 2022 ஜூன் 13 , பி.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான், நூருல் ஹுதா உமர்

திருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரியில் ஹபாயா அணிந்து சென்றமைக்காக வெளியேற்றப்பட்ட ஆசிரியை பஹ்மிதா ரமீஸ், கல்லூரியின் அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜனுக்கு எதிராக திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கில் அதிபருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் எழுத்து மூலக் கட்டளைக்கிணங்க, கடந்த பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி  கல்லூரிக்கு கடமையேற்க சென்றிருந்த பஹ்மிதா றமீஸை கடமையேற்க விடாது பல குழப்பங்கள் விளைவிக்கப்பட்டிருந்தன. 

அதுதொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு  ஓகஸ்ட் மாதம் 04 ம் திகதி மீண்டும் விசாரணைக்கு வருகின்றது. அன்றையதினம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அதிபருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X