2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

வெருகல் பிரதேச சபைக்கு புதிய தலைவர்

Editorial   / 2022 மார்ச் 03 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன்

வெருகல் பிரதேச சபையின் புதிய தலைவராகத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த தேவராசா விஜயரகுவரன், இன்று (03) காலை பதவியேற்றார்.

இதன்போது உரையாற்றிய புதிய தலைவர், எனது தவிசாளர் பதவிக் காலம் மிகக் குறுகிய காலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் உறுப்பினர் அனைவருடைய முன்மொழிவுகளையும் உள்வாங்கி ஒரு வரவு - செலவுத்திட்டத்தை நிறைவேற்றுவது தனது முதலாவது கடமையாக இருக்கும் என்கிறார்.

அத்துடன், இந்தப் பிரதேச சபைக்கு வருமானம் தரக்கூடிய வழிகளைக் கண்டுபிடித்து சபையின் வருமானத்தை பெருக்க முயற்சி செய்யப் போவதாகவும் அவர் மேலும் கூறினார்.

இந்நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டத் தலைவர் சண்முகம் குகதாசன்,  துணைத் தலைவர் வி.விஜயகுமார், முன்னாள் பிரதேச சபைத் தலைவர் க.சுந்தரலிங்கம், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச சபைச் செயலாளர் மற்றும் பிரதேச சபை ஊழியர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X