Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Princiya Dixci / 2021 பெப்ரவரி 21 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை - கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 91ஆம் கட்டை சாந்திப் பகுதியில் மனைவியை, கணவன் கூரிய ஆயுதத்தால் குத்தி காயப்படுத்திய சம்பவமொன்று, நேற்று (20) நடைபெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த தனது மனைவியை, மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த கணவன் வழி மறித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இருவரும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் பின்னர் திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்த கூரிய ஆயுதத்தை எடுத்து தனது மனைவியை சரமாரியாக 35 தடவைகள் வெட்டியும் குத்தியும் கணவன் படுகாயம் ஏற்படுத்தியுள்ளார் எனத் தெரியவருகின்றது.
இதன்போது, அந்த இடத்துக்கு வருகைத் தந்த பொலிஸ் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர், சந்தேகநபர் மனைவியை வெட்டுவதை கண்டு, மீண்டும் திரும்பிச் சென்றுள்ளதை அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காணொளியில் பதிவாகியுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த பெண், திருகோணமலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
49 minute ago
50 minute ago
1 hours ago