Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 மே 03 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
சௌபாக்கியா திட்டம் ஊடாக, பல்வேறு நச்சுத்தன்மையற்ற உற்பத்திகளை மேற்கொள்ள வேண்டுமென, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார்.
"சௌபாக்கியா" திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாண விவசாயத் துறையை மேம்படுத்துவதற்காக, திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்திலேயே ஆளுநர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் கூறுகையில், “கிழக்கு மாகாணத்தில் விவசாயம் இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதிலிருந்தும் உரங்களுடன் நச்சு அல்லாத விவசாயத்தைப் பிரபலப்படுத்துவதிலிருந்தும் படிப்படியாக அகற்றப்படுகிறது. இதன் முதல் கட்டமாக, வீட்டு தோட்டங்களுக்கு உரங்களைப் பயன்படுத்த பொதுமக்களுக்கு அறிவுறுத்துவதாக இருக்க வேண்டும்.
“இந்த நோக்கத்துக்காக கலப்பின விதைகளுக்கு பதிலாக பாரம்பரிய காய்கறி, பழ விதைகளை அறிமுகப்படுத்த வேண்டும்.
“உள்ளூர் பயிர்களை பயிரிட விவசாயிகளை ஊக்குவிப்பதற்கும், மாகாணத்தின் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கும் நச்சுத்தன்மையற்ற உரங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago