2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

வலயம் மாறியுள்ள பாடசாலைகளால் சிக்கல்

Editorial   / 2020 மே 21 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீட்

பரீட்சைப் புள்ளிப் பகுப்பாய்வின் போது, திருகோணமலை மாவட்டத்திலுள்ள  சில பாடசாலைகள், வலயம் மாறி சேர்க்கப்பட்டுள்ளமையால் சிக்கல் நிலை தோன்றியுள்ளதாக, கிண்ணியா கிழக்கு வள அபிவிருத்தி மய்யம் (EFFORD)  சுட்டிக்காட்டியுள்ளது.

இவற்றை உரிய வலயங்களுக்குள் சேர்க்க ஆவண செய்யுமாறு, பரீட்சை ஆணையாளர் நாயகத்திடம் கோரிக்கை கடிதமொன்றையும், மேற்படி மய்யம்  அனுப்பியுள்ளது.

இக்கோரிக்கை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“பரீட்சைப் புள்ளிப் பகுப்பாய்வின் போது, திருகோணமலை மாவட்டத்திலுள்ள சில பாடசாலைகள் வலயங்கள் மாறி பட்டியல்படுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக, கிண்ணியா வலயப் பாடசாலைகள் சில, மூதூர் வலயத்தினுள் சேர்க்கப்பட்டுள்ளன. திருகோணமலை வலயப் பாடசாலைகள் சில, கிண்ணியா வலயத்தினுள் சேர்க்கப்பட்டுள்ளன.

“இதனால் வலயங்கள் தொடர்பான சரியான பகுப்பாய்வைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது. மாகாண, மாவட்ட பகுப்பாய்வுகளில் மாற்றம் இல்லாத போதிலும் வலயங்கள் தொடர்பான பகுப்பாய்வுகளில் அவை மாற்றத்தை ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

“எனவே, வலயம் மாறியுள்ள பாடசாலைகளை உரிய வலயங்களுக்குள் சேர்த்து, எதிர்காலத்தில் பகுப்பாய்வு செய்ய ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .