2024 நவம்பர் 23, சனிக்கிழமை

வர்த்தகரை வாகனத்தில் கடத்தி கொன்று கொளுத்தி கொலை

Editorial   / 2024 ஜூலை 15 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாகனம் ஒன்றுடன் முற்றாக எரியூட்டப்பட்ட நிலையில் திருகோணமலை வனப்பகுதியில் இருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர். 

மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன் மதவாசி வனப்பகுதியில் திருகோணமலை- அனுராதபுர பிரதான வீதியில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் பயணிக்க கூடிய வனப்பகுதியில் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளதாக  கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்,  செல்வநாயகம் புரம் பகுதியை சேர்ந்த ஜெயரூபன் (வயது - 42) எனவும்  அவரின் கேப் ரக வாகனம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர், இவர், இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டதாக  திருகோணமலை உப்புவெளி பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஜெயரூபன் என்பவரை வீட்டிலிருந்து நபரொருவர் வெள்ளிக்கிழமை (12)  அதிகாலை 2 மணியளவில் அழைத்துச் சென்றதாகவும் பின்னர் இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பினால் அவர் தாக்கப்பட்டதாகவும் அதன்பின்னர் அவர், காணாமல் போனதாகவும் உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஜெயரூபனின் குடும்பத்தினரினால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. 

பின்னர் குறித்த சம்பவம் தொடர்பில்  48,  51 மற்றும் 24 வயதுடைய மூவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். அந்த மூவரிடம் இருந்தும் வாக்குமூலங்கள் பெறப்பட்டன.

 அதனடிப்படையிலேயே எரியூட்டப்பட்ட இடத்தை மொறவெவ மற்றும் உப்புவெளி பொலிஸார் இணைந்து கண்டறிந்த குறித்த காட்டுப்பகுதியில் வாகனத்துடன் எரியூட்டப்பட்ட சடலத்தை மீட்டனர்.

 சம்பவ இடத்தை, திருகோணமலை மாவட்ட பதில் நீதவான் ஹனிபா அன்வர்   பார்வையிட்டதுடன்   பொலிஸ் பகுப்பாய்வு திணைக்களத்தின் பகுப்பாய்வுக்கு பின்னர் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய உடல் கூற்று பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு சடலம் கொண்டு செல்லப்படவுள்ளது.

 குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் (வயது - 26 மற்றும் வயது - 29) ஆகிய இரு சந்தேக நபர்கள் திருகோணமலையை விட்டு தப்பி சென்றுள்ளதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர். 

மேலும் இவ்வாறு தப்பிச்சென்ற இரு சந்தேக நபர்களையும் உப்புவெளி பொலிஸார் தேடி வருவதுடன் குறிப்பிட்ட இரு சந்தேக நபர்களின் புகைப்படத்தினை வெளியிட்டு சந்தேக நபர்களை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியையும் நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 ஏ. எம். கீத்   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X