2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

வாகன விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி பலி

Janu   / 2025 ஏப்ரல் 24 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரியபாலம் பகுதியில் வியாழக்கிழமை (24)  இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

கெப் வாகனம் ஒன்று முன்னால் பயணித்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.இதில் மூதூர் -ஆனைச் சேனையைச் சேர்ந்த 62 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.  

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .