2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை

லொறியொன்று வீடொன்றில் மோதி விபத்து ; இரண்டு சிறுவர்கள் படுகாயம்

Freelancer   / 2022 ஜூன் 04 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்  

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலில் பிரிவுக்குட்பட்ட பகுதியில், லொறியொன்று பாதையை விட்டு விலகி வீடொன்றில் மோதி விபத்துக்குள்ளானதில், இரண்டு சிறுவர்கள் படுகாயமடைந்து, கந்தளாய் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக  கந்தளாய் பொலிஸார் தெரிக்கின்றனர்.

இவ்விபத்துச் சம்பவம் இன்று(4) இடம்பெற்றுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலையிலிருந்து தம்புள்ளை பகுதிக்குச் சென்ற லொறியொன்றே இவ்வாறு வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனம் ஒன்றினையும் மோதி வீடொன்றினுள் புகுந்துள்ளதாகவும்,  இதனால் வீட்டில் இருந்த இரண்டு சிறுவர்கள் படுகாயங்களுக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சாரதியின் நித்திரை கலக்கமும், அதிக வேகமுமே விபத்துக்கு காரணமென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், லொறியின் சாரதியை கைது செய்துள்ளதோடு, இவ்விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X