Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை
Freelancer / 2023 மே 06 , பி.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை - கோமரங்கடவல பகுதியில் இன்று (06) காலை யானை தாக்குதலினால் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதில் கோமரங்கடவல - கரக்கஹவெவ பகுதியில் வசித்து வரும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆனந்த காமினி வத்தேவெவ (44 வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
கோமரங்கடவல ரிதீபுர பகுதியில் கடந்த ஒரு வார காலமாக யானையின் அட்டகாசம் அதிகரித்து வந்த நிலையில், வன ஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகளுடன் இணைந்து கிராம மக்கள் யானையை விரட்டுவதற்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் யானை குறித்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரை தாக்கியதாகவும் சம்பவ இடத்திலேயே குறித்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் கோமரங்கடவல பிரதேச வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை கோமரங்கடவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
30 minute ago
1 hours ago
6 hours ago