Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 ஜூன் 19 , பி.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை மாவட்டத்தின் அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், வீதியால் சென்ற ஒருவருக்கு மறைந்திருந்து காட்டு யானை தாக்கியதில் ஒருவர் ஸ்தலத்திலே ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று (18) மாலை இடம்பெற்றுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் மெதிரிகிரிய பகுதியைச் சேர்ந்த டபிள்யு எம்.சுனில் வயது (40) எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கந்தளாயில் இருந்து மெதிரிகியவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற போதே மறைந்திருந்து வீதியை மறித்து காட்டு யானை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர மற்றும் மெதிரிகிரிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .