2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

யானைகள் தொல்லை; தோட்டங்கள் பாதிப்பு

Editorial   / 2020 மே 18 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

 திருகோணமலை – ரொட்டவெவ, சம்பூர் பிரதேசங்களில் காட்டு யானைகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக, பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

சம்பூர் பிரதேசத்தில் மீள்குடியமர்த்தப்பட்ட நிலையில்,  தற்போது காணிகளுக்குள் மரவள்ளி, வீட்டுத் தோட்டங்கள் செய்து வருகின்ற வேளையில்,  யானைகள் கிராமத்துக்குள் உட்புகுந்து அட்டகாசம் செய்து வருவதுடன், பயிர்களை சேதப்படுத்துவதாகவும், மக்கள்  கவலை தெரிவிக்கின்றனர்.

 வாழை, பலா, தென்னை மரங்கள் போன்றவற்றை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளைக்  கட்டுப்படுத்துவதற்கு யானை  மின் வேலிகளை அமைத்துத் தருமாறு, கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும்அரச அதிகாரிகள்  கரிசனை காட்டவில்லையென, பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

எனவே, சம்பூர், ரொட்டவெவ கிராமங்களில் காட்டு யானைகளின் தொல்லையை நீக்குவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் மீண்டும் கோரிக்கை விடுக்கின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .