2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

மோட்டார் குண்டு வெடித்து குடும்பஸ்தர் உயிரிழப்பு

J.A. George   / 2021 மார்ச் 20 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீனன்வெளிப் பகுதியில் 81 ரக மோட்டார்  குண்டு வெடித்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, சேருநுவர பிரதேச வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். 

இந்தச் சம்பவம், நேற்று (19) மாலை இடம்பெற்றுள்ளது.

இந்நபர்  வைத்திருந்த மோட்டார் குண்டை, கிரைண்டர் மெசின் மூலமாக அறுத்து மருந்துகளை எடுக்க முற்பட்டபோது, குண்டு வெடித்துள்ளதாகவும் இதன்போதே அவர் உயிரிழந்ததாகவும் பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் சீனன்வெளி பகுதியைச் சேர்ந்த  அல்லிமுத்து ஜெகன் எனும் 45 வயதுடைய குடும்பஸ்தராவார்.

சம்பவம்  தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .