2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை

மேலதி வகுப்புக்கள் நடத்தல் தொடர்பாக; எடுக்கப்பட்ட முடிவு

Freelancer   / 2022 ஜூன் 03 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட் 

மூதூர் பிரதேசத்தில் இயங்குகின்ற மேலதிக வகுப்புக்களை குறித்த நேரத்திற்குள் நடாத்தி முடிக்க வேண்டுமென மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.ஏ.அரூஸ் அறிவித்தல் விடுத்துள்ளார்.

அட்டுழுகமவில் சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமைஇ வவுனியாவில் சிறுமியொருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை உள்ளிட்ட காரணங்களை வைத்து சிறுவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் காலை 6.00 மணிமுதல் மாலை 6.00 மணிக்கும் இடைப்பட்ட காலத்தில் மாத்திரமே மேலதிக வகுப்புக்கள் நடாத்தப்பட வேண்டுமென மூதூர் தவிசாளர் அறிவித்தல் விடுத்துள்ளார்.

இதனை மீறி மேலதிக வகுப்புக்களை நடாத்தி ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெற்றால் அதற்கு உரியவர்களே பொறுப்புக்கூற வேண்டும் எனவும் தவிசாளர் அவ் அறிவித்தலில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அறிவித்தலின் பிரதிகள் மூதூர் வலயக்கல்வி பணிப்பாளர்இ மூதூர் பிரதேச செயலாளர்இ  பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்டோருக்கு மூதூர் பிரதேச சபையின் தவிசாளரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X