Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Janu / 2023 ஜூன் 05 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட்
மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அண்மைக் காலமாக டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் மூதூர் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் கிராம அபிவிருத்தி சங்கத்தினர்,இளைஞர்கள்,விளையாட்டு கழகங்கள்,மதஸ்தல நிருவாகத்தினர் உள்ளிட்ட சமூக மட்ட அங்கத்துவர்களிடம் கலந்துரையாடி மூதூரிலிருந்து டெங்கினை ஒழிப்பதற்கான விசேட கூட்டம் மூதூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.
இதன்போது டெங்கு பரவும் இடங்களை இணங்கண்டு சிரமதானம் மேற்கொள்ளல்,பொதுமக்களுக்கு விழிப்பூட்டல்,டெங்கு பரவும் வகையில் சுற்றுச்சூழலை வைத்திருப்போருக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளல் உள்ளிட்ட பல விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன.
இதில் மூதூர் பிரதேச செயலாளர்,மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி,மூதூர் பிரதேச சபையின் செயலாளர் ,மூதூர் சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதகர்,உதவித் திட்டமிடல் பணிப்பாளர்,பொலிஸார்,கிராம உத்தியோகத்தர்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
21 minute ago
2 hours ago