Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை
Princiya Dixci / 2020 நவம்பர் 19 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட், எப்.முபாரக்
திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூதூர் நகரில் உள்ள 05 வர்த்தக நிலையங்கள், இன்று (19) அதிகாலை இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டு, அங்கிருந்து பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தில் நகைக்கடை, அலைபேசிகள் விற்பனை நிலையம், சிகை அலங்கார நிலையம், ஹோட்டல் போன்றனவே உடைக்கப்பட்டு, அங்கிருந்த பெறுமதிமிக்க அலைபேசிகள், வெள்ளி நகைகள், பணம் போன்றன திருடப்பட்டுள்ளன.
இதனையடுத்து, உடைக்கப்பட்ட வர்த்தக நிலையங்களில் திருகோணமலை தடயியல் பிரிவு பொலிஸார், மூதூர் பொலிஸாரோடு இணைந்து இன்று காலை சோதனை மேற்கொண்டனர்.
சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை. எனினும், சிசிடிவி காணொளிகளை வைத்து மூதூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
2 hours ago
3 hours ago