2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

மூதூரில் டெங்கு தொற்று அதிகரிப்பு

Editorial   / 2021 டிசெம்பர் 29 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதால் பொதுமக்கள் தங்களது வீடுகளையும் சுற்றுச் சூழலையும் சுத்தமாக வைத்திருக்குமாறு, மூதூர் சுகாதார வைத்திய அதிகாரிஹில்மி முகைதீன் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்தோடு,  தமது சுகாதாரப் பரிசோதகர்கள், பிரதேசத்தில் உள்ள வீடுகளுக்குச் சென்று சோதனையிட்டபோது, டெங்குக் காய்சலை ஏற்படுத்தும் நுளம்புக் குடம்பிகளை பல வீடுகளிலிருந்து கண்டறிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2020ஆம் ஆண்டு மாத்திரம் 452 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டிருந்தனர்.

2021ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் இன்று (29) வரை 111 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இம்மாதம் மாத்திரம் 63 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதனால் டெங்குத் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்குமாறும் சுகாதார வைத்திய அதிகாரி மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .