Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2022 ஜனவரி 16 , பி.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ்
கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், 2022ஆம் ஆண்டுக்கான அளவை, நிறுவை உபகரணங்களை சரிபார்த்து முத்திரையிடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக திருகோணமலை மாவட்ட அளவிட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் பொறுப்பதிகாரி பி. இராஜேஸ்வரன் தெரிவித்தார்.
இதன்படி, இம்மாதம் 18, 19, 20 மற்றும் 21 ஆகிய திகதிகளில் கிண்ணியா பிரதேச பிரதேச செயலக கட்டடத்தில் காலை 09 மணி முதல் மாலை 03 மணி வரை இப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
கடைகள், கூட்டுறவுச் சங்கங்கள், கமநல சேவைத் திணைக்களங்கள் மற்றும் வங்கிகளில் உபயோகிக்கும் சகல அளவை, நிறுவை உபகரணங்களுக்கும் இதன்போது முத்திரையிடப்படவுள்ளன.
இவ்வாறு முத்திரை இடப்படாது, வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது, 1995 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க அளவீட்டு அலகுகள், நியமங்கள் சேவைகள் சட்டத்தின் பிரகாரம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
39 minute ago
41 minute ago
52 minute ago