2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

மினி சூறாவளி; கந்தளாயில் 60 வீடுகள் சேதம்

Editorial   / 2020 மே 19 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக் 

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்தில் இன்று (19) ஏற்பட்ட மினி சூறாவளியால் 60 வீடுகள் சேதமடைந்துள்ளனவென, கந்தளாய் பிரதேச சபையின் தவிசாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்தார்.

கந்தளாய் அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்போபுர, வட்டுக்கச்சி, ரஜவெவ போன்ற பகுதிகளில் நேற்று முதலே கடும் காற்று வீசியதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது ஏற்பட்ட சேத விவரங்களை கணக்கெடுக்க அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் வருகை தந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டுள்ளதாகவும், இந்த மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும் தவிசாளர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .