Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 09, புதன்கிழமை
Freelancer / 2022 ஒக்டோபர் 29 , மு.ப. 08:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ்
அகில இலங்கை பாடசாலைகள் உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் திருகோணமலை மாவட்ட பாடசாலை அணிகளுக்கிடையே நடாத்தப்பட்ட பெண்கள் பிரிவுக்கான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில், திருகோணமலை சென் மேரிஸ் கல்லூரியின் இரு அணிகள் 2022 ஆம் ஆண்டுக்கான மாவட்ட மட்ட சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டன.
இந்தத் தொடரின் இறுதிப்போட்டி நேற்று (28) கிண்ணியா எழிலரங்கு மைதானத்தில் நடைபெற்றது.
இதில் இந்தக் கல்லூரியின் 14 மற்றும் 16 வயது ஆகிய இரு அணிகளும் வெற்றியை தனதாக்கிக் கொண்டு, இவ்வருட சம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டது.
இந்த இரு அணிகளும் அகில இலங்கை பாடசாலைகள் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதாகவும், அதற்காக இரு அணிகளின் விபரங்கள் அனுப்பி வைக்கப்படும் என்றும் அகில இலங்கை பாடசாலைகள் உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளரும் கிண்ணியா உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவருமான
ஏ. எல். எம். நபீல் தெரிவித்தார். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .