Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 09, புதன்கிழமை
Freelancer / 2023 ஜனவரி 04 , மு.ப. 09:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு 10 கிராம் ஹேரொயின் போதைப் பொருளை கொண்டு சென்ற ஒருவரை கந்தளாயில் வைத்து இன்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
10 கிராம் ஹேரொயின் போதைப்பொருளை 100 பைக்கட்டுகளில் இட்டு மலவாயில் ஊடாக மறைத்து கொண்டு சென்ற போதே கந்தளாய் இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கந்தளாய் இராணுவ புலனாய்வு பிரிவினர் சந்தேக நபரை கைது செய்து கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
கந்தளாய் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அதிகூடிய ஹேரொயின் போதைப் பொருள் தொகை இதுவாகும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .