Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2022 மே 08 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர்
நாட்டில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டம் சரியான இலக்கை நோக்கி நகருகின்றதா என கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம். எம் .மஹ்தி சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று (08) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இவ்வாறு சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
அத்துடன், இந்தப் போராட்டங்களுக்குக் காரணமானவர்கள் யார் என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “நல்லாட்சிக் காலத்தில், மொட்டுக் கட்சியே மத்திய வங்கி ஊழல் குற்றச்சாட்டை சுமத்தியது. எந்தவோர் அடிப்படையும் இன்றி இன, மத வாதங்களை தூண்டி குழப்பங்களையும் அழிவுகளையும் ஏற்படுத்தியது.
“ஆனால், மொட்டின் உண்மை முகத்தை அறியாதவர்கள் 69 இலட்சம் வாக்குகளையும் வழங்கினார்கள். மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு 20 ஆவது திருத்தத்தையும் அவர்களே நிறைவேற்றினர்.
“அதே மொட்டுக் கட்சி, மத்திய வங்கி மோசடிக்கு எதிராக எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. திகன, அம்பாறை மற்றும் ஏப்ரல் 21 என பல்வேறு தாக்குதல்களுக்கு காரணமானவர்களைக் கூட கண்டுபிடிக்கவில்லை.
“அதேநேரம் பாராளுமன்ற சூழலில் தற்காலத்தில் நடைபெற்ற சில சம்பவங்கள் பின்வரும் வினாக்களை எழுப்புகின்றன.
“தற்போதைய ஆட்சியை உண்டாக்கியவர்கள் யார்?, நாட்டின் ஸ்திரத் தன்மையையும் பொருளாதாரத்தையும் வீழ்த்தியது யார்?, அனைத்துக்கும் காரணமானவர்களுக்கு எதிராக குரலெழுப்பும் எதிர்க்கட்சியினரையும் போராட்டக்காரர்கள் இலக்கு வைத்தால், அடுத்து எதை சாதிக்கப் போகிறோம்?, 225 பேரும் வீடு சென்றால் அடுத்து சாத்தியமான சட்ட ரீதியான அனுகுமுறைதான் என்ன?,
“இந்தப் போராட்டம் வெற்றியடையும் தருணத்தை அண்மித்தால் அடுத்து நாம் பேசப் போவதும் செய்யப் போவதும் என்ன?, எல்லோரிலும் குற்றத்தை சுமத்தி தீர்வின்றி பயணித்தால் இப்போராட்டம் வெற்றி பெறுமா?” எனும் கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
34 minute ago
36 minute ago
47 minute ago