2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

போராட்டத்துக்கு கிண்ணியா வலய அதிபர்கள் ஆதரவு

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 18 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன்  கியாஸ், ஏ.எம்.ஏ.பரீட்

அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை  தீர்க்க கோரி, தேசிய ரீதியாக ஆசிரியர் சங்கங்கள் மேற்கொண்டு வரும்  தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவது என கிண்ணியா வலய  அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

கிண்ணியா அல்ஹிரா  மகா வித்தியாலயத்தில் இன்று (18) நடைபெற்ற  விசேட கூட்டத்திலே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டாதாக  சங்கத் தலைவர் எம்.எம்.எம்.முசம்மில் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், மேற்படிக் கூட்டத்தில், எதிர்வரும் 21ஆம் திகதி அதிபர், ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகம் அளிப்பதில்லை எனவும் கல்வித் திணைக்களங்களால்  கோரப்படுகின்றன கோரிக்கைகளுக்கு பதில் அளிப்பதில்லை இல்லை எனவும் ஏகமனதாக  தீர்மானிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .