2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன

Editorial   / 2020 மார்ச் 18 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.கீத்

திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குட்டிக்கராச்சி சந்தியிலுள்ள மருந்தகமொன்றில் 2,040 போதை மாத்திரைகள், இன்று (18) கைப்பற்றப்பட்டதாக, போதைபொருள் ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

நீண்டகாலமாக போதை மாத்தரைகளை விநியோகிக்கும் ஸ்தலமாக மேற்படி மருந்தகம் இயங்கி வருவதாகக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பின்போது, குறித்த மருந்தகத்தில் போதை மாத்திரைகளை கைப்பற்றமுடிந்ததாக, போதைபொருள் ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

போதை மாத்திரைகளை விற்பனை செய்ய முற்பட்ட 35 வயது நபரொருவரும் இதன்போது கைதுசெய்யப்பட்டாரெனவும் அப்பிரிவினர் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரையும் கைப்பற்றப்பட்ட  போதை மாத்திரைகளையும் மேலதிக நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக, கிண்ணியா பொலிஸார் வசம் ஒப்படைத்தாகவும் போதைபொருள் ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .