Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை
Freelancer / 2023 மார்ச் 24 , பி.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
அபு அலா
பெண்களை வலுப்படுத்துவதற்காக வர்த்தகக் கண்காட்சி மற்றும் புத்தாக்க நிகழ்வுகள், திருகோணமலை மாவட்டச் செயலாளர் வி.எச்.என்.ஜயவிக்ரம தலைமையில், மாவட்டச் செயலக வளாகத்தில் நேற்று (23) நடைபெற்றன.
கிழக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகம், திருகோணமலை மாவட்டச் செயலகம், ஜி.ரி. செட் ஜெர்மன் கார்ப்பரேஷன் மற்றும் Nucleus மன்றம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த “அவள் தேசத்தின் பெருமைக்குறியவள்” எனும் தொனிப்பொருளிலான சர்வதேச மகளிர் தினம் - 2023 மாவட்ட நிகழ்வுக்கு இணைவாக இது நடத்தப்பட்டது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹமத் கலந்துகொண்டு, ஆரம்பித்து வைத்தார்.
அங்கு அமைக்கப்பட்ட 68 விற்பனைக் கூடாரங்களில் விஷேட வேலைத்திட்டங்களாக டிஜிட்டல் வலயம், ICT தொழில் வங்கி மற்றும் தொழில் வழிகாட்டுதல்கள், ICT பாடநெறிகள் மற்றும் Webinars, டிஜிட்டல் வங்கிச் சேவைகள், இலத்திரனியல் விளையாட்டுக்கள், கண்காட்சிக் கூடாரங்கள், சுயதொழில் உற்பத்திப்பொருட்கள் போன்றன அமையப்பெற்றன.
இதில் மத்திய மாகாணத்தை சேர்ந்த 30 இற்கும் மேற்பட்ட தொழில் முயற்சியாளர்களும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டத்திலுள்ள தொழில் முயற்சியாளர்களும் பங்கு கொண்டனர்.
இதில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவான் அத்துக்கோரல்ல, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க, மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதரன், மாகாண கல்வியமைச்சின் செயலாளர் எச்.இ.எம்.டபிள்யூ.ஜி.திசாநாயக, கிழக்கு மாகாண பேரவைச் செயலக செயலாளர் எம்.எம்.நஸீர் மற்றும் மாகாண திணைக்களங்களின் செயலாளர்கள், மாகாணப் பணிப்பாளர்கள், மாகாண ஆணையாளர்கள் உள்ளிட்ட பல உயரதிகாரிகளும், உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். (N)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
14 minute ago
46 minute ago
6 hours ago