2025 ஏப்ரல் 10, வியாழக்கிழமை

பூ பறிக்கச் சென்றவர் பலி

Mayu   / 2024 பெப்ரவரி 28 , மு.ப. 11:00 - 0     - 112

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை,  பூநகர் பணிச்சங்குளத்தில் தாமரைப்பூ பரிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி இன்று (28) காலை  உயிரிழந்துள்ளார்.

ஈச்சிலம்பற்று-பூமரத்தடிசேனை பகுதியில் வசித்து வரும் கனகசுந்தரம் விவேகானந்தன் (33வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நண்பருடன் தாமரைப்பூ பறிப்பதற்காக பைபர் படகில் இருவரும் சென்ற போது பைபர் படகு கவிழ்ந்ததாகவும், இதனையடுத்து நண்பரை பாதுகாக்க முடியாத நிலையில் நீந்தி கரைக்கு வந்ததாகவும் சக நண்பர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதோடு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X