Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Princiya Dixci / 2021 மார்ச் 04 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை, புறா மலைப் பகுதியில் வெடிபொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஐந்து சந்தேக நபர்களையும், இம்மாதம் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சந்தேக நபர்களை, திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமீலா குமாரி ரத்னாயக்க முன்னிலையில் நேற்று (03) ஆஜர்படுத்திய போதே, இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
திருகோணமலை கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட சோதனையின் போது, சந்தேக நபர்களை கைது செய்து துறைமுக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், திருகோணமலை, வெள்ளைமணல், ஜமாலியா, வெள்ளை மணல் போன்ற பகுதிகளைச் சேர்ந்த 25 மற்றும் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை கடற்பரப்பில் தொடர்ந்தும் மீன்பிடித் திணைக்களத்துடன் கடற்படையினர் இணைந்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கடற்படையின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
34 minute ago
48 minute ago
2 hours ago