2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

புதிய மையவாடிக்கான இடஒதுக்கீடு: பிரேரணை வாபஸ்

Niroshini   / 2020 ஒக்டோபர் 14 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பாறுக் ஷிஹான்

மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பள்ளிவாசலின் ஜனாஸா மையவாடியின் சுற்றுமதிலின் ஒரு பகுதி கடலரிப்புக்கு இலக்காகி இடிந்து விழுந்துள்ளமையைத் தொடர்ந்து, புதிய மையவாடிக்கான இடஒதுக்கீடு தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை, சகல உறுப்பினர்களின் வாதப்பிரதிவாதங்களால் வாபஸ் பெறப்பட்டது.

காரைதீவு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, அம்பாறை - காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கே.ஜெயசிறில் தலைமையில், சபாமண்டபத்தில் இன்று (14) ந​டைபெற்றது.

இதன்போத, உப தவிசாளர் ஏ.எம் ஜாகீரினால், புதிய ஜனாஸா மையவாடிக்கான இடஒதுக்கீடு தொடர்பான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்போது, உறுப்பினர்களான ஏ.ஆர் எம்.பஸ்மீர் எம் .எச்.எம் இஸ்மாயில் குமாரசிறி சசிகுமார் உள்ளிட்ட உறுப்பினர்கள் இந்தக் பிரேணை தொடர்பாக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்ததுடன், பிரேரணையை ஏற்காமல் அதனை இரத்து செய்ய வேண்டுமென்றும் கூறினர்.

இதையடுத்து உரையாற்றிய தவிசாளர், இவ்விடயம் காணி விவகாரம் என்பதால், முதலில் பிரதேச செயலாளரின் கவனத்துக்குக் கொண்டு சென்ற பின்னரே, சபைக்கு இந்த விவகாரத்தை கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் இந்தப் பிரேரணையை எடுத்துகொண்டு, வாதப்பிரதிவாதங்களில் ஈடுபடுகின்றோமெனவும் சாடினார்.

எனவே இவ்விடயத்தில் அரசியல் சாயங்களை பூசாமல், இரு சமூக மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு, குழுவொன்றை அமைத்து, இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படுமெனக் கூறினார்.

தவிசாளரின் இந்த முடிவுக்கு சகல உறுப்பினர்களும் கட்டுப்பட்டதைத் தொடர்ந்து, தன்னால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையை உப தவிசாளர் வாபஸ் பெற்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X