Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை
Freelancer / 2023 மே 11 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
ஊடகவியலாளர்களுக்கும் சிவில் சமூக பிரதிநிதிகளுக்கும் இடையே தொடர்பாடலை அதிகரிக்கும் அறிவூட்டல் செயலமர்வு, திருகோணமலை மல்லிகா விடுதியில் நேற்றும் (10) இன்றும் (11) இடம்பெற்றது.
பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வெளிக்கொணர்தல் செயற்றிட்டத்தின் இன்னுமொரு நடவடிக்கையாக, திருகோணமலை எழுத்தாணி அமைப்பினால் இச்செயலமர்வு முன்னெடுக்கப்படுகிறது.
செமலமர்வின் வளவாளராக விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.பீ.எம்.பைரூஸ் கலந்துகொண்டு தெளிவூட்டல்களை வழங்கினார்.
எழுத்தாணி அமைப்பின் தலைவர் வடமலை ராஜ்குமார் மற்றும் பொருளாளர் அரசரத்தினம் அச்சுதன் ஆகியோருடன் அமைப்பின் திட்ட ஆலோசகர் சுபாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தச் செயலமர்வில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் மற்றும் பெண் ஊடகவிலாளர் என 20 ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.
இச் செயலமர்வைத் தொடரந்து சிவில் சமூக அமைப்புக்களுடனான அமர்வுகள் இடம்பெறவுள்ளதாக எழுத்தாணி அமைப்பின் தலைவர் தெரிவித்தனர். (N)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
18 minute ago
50 minute ago
6 hours ago