2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

பாடசாலையின் பாதுகாப்பு வேலிகள் யானைகளால் சேதம்

Princiya Dixci   / 2020 நவம்பர் 25 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எப்.முபாரக் 

திருகோணமலை - அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள சீனிபுர பண்டாரநாயக்க மகா வித்தியாலயத்தின் பாதுகாப்பு வேலிக் கம்பிகள், காட்டு யானைகளால் இன்று (25) அதிகாலை பிடுங்கி எறியப்பட்டுள்ளன.

பாடசாலை வளாகத்துக்குள் உள்ள மா கன்றுகளையும் யானைகள் சேதப்படுத்தியுள்ளதாகவும் இப்பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.

இந்தத் தகவல் அறிந்து, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான கபில நுவான் அத்துக்கோரல, பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டு, பாதிப்பு விடயங்களை அதிகரிடம் கேட்டறிந்தார்.

இதனையடுத்து, பாடசாலையின் வேலிகளை சரி செய்து கொடுக்குமாறும் இப்பகுதிகளில் யானைகள் வராமல் பாதுகாப்பதற்கான பாதுகாப்பு வேலிகளை இடுமாறும், வனஜீவராசி பாதுகாப்பு அதிகாரிகளிடம் நாடாளுமன்ற உறுப்பினர் பணிப்புரை விடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X