2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

பரீட்சை எழுதிய இளைஞனுக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2020 ஒக்டோபர் 15 , பி.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்  

நடைபெறுகின்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில், திருகோணமலை -மூதூர் வலயக்கல்வி அலுவலகத்துக்கு உட்பட்ட சேனையூர் மத்திய கல்லூரி பரீட்சை நிலையத்தில், ஆள்மாறாட்டம் செய்து வெளிவாரியாகப் பரீட்சைக்குத் தோற்றிய இளைஞனை, இம்மாதம் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மூதூர் நீதவான் உத்தரவிட்டார்.  

 21 வயது இளைஞனே, மேற்படி குற்றச்சாட்டில், சம்பூர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, மூதூர் நீதவான் நீதிமன்றில் நேற்று (14) ஆஜர்படுத்தியதை அடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  

இவ்விளைஞன், தனது மைத்துனருக்காக உயர்தரப் பரீட்சையில் இந்து நாகரீகப் பாடத்தை எழுதிக் கொடுப்பதற்கு செவ்வாய்கிழமை (13) வருகை தந்தபோது, இருவரது ஆள் அடையாளத்தைப் பார்த்து சந்தேகம் கொண்ட பரீட்சை மேற்பார்வையாளர்கள், சம்பூர் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.  

சந்தேகநபர், கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .