2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

தொழில் முனைவோருக்கு காணி வழங்கும் நேர்முகத்தேர்வு

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 17 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதற்காக அரசாங்க காணிகளில் முதலீட்டு வாய்ப்புக்களை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தில், ஒரு இலட்சம் காணித் துண்டுகளை வழங்குதல் என்ற திட்டத்துக்கு அமைவாக நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகின்றது. 

இதன்படி, தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவிலும் காணித் துண்டுகளை வழங்குதல் தொடர்பான நேர்முகத் தேர்வு, பிரதேச செயலக மண்டபத்தில் மூன்றாவது நாளாக இன்றும் (17) நடைபெற்றது. இதன்போது, பல ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டன. 

இந்த நேர்முகத் தேர்வானது காணிக் கிளை ஊடாக நடைபெற்றதுடன், நேர்முகத் தேர்வில் தம்பலகாமம் பிரதேச செயலக உதவித் சிட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப் உள்ளிட்டோர் இதில் பங்கேற்று, ஆவணங்களை பரிசீலித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .