2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

தென்னை நார் தொழிற்சாலை திறப்பு

Freelancer   / 2022 மார்ச் 01 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எப்.முபாரக்)

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் அக்போபுர பகுதியில் தென்னை நார் தொழிற்சாலை திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான கபில அத்துக்கோரலவினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஐரோப்பிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யும் நோக்கில் இந்தத் தென்னை நார் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது. 

கைவிடப்பட்ட தேங்காய் மட்டைகளைப் பயன்படுத்தி பல்வேறு வகையான தென்னை சார்ந்த பொருட்கள் இதன் மூலம் உற்பத்தி செய்யப்படவுள்ளன.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் தலைமையிலான தற்போதைய அரசு முன்வைத்த 2022ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் முக்கிய நோக்கம் கிராமிய பொருளாதாரத்தை உயர்த்துவதும், உற்பத்தியை ஊக்குவிப்பதும், உற்பத்தி பொருளாதாரத்தை நாட்டில் கட்டியெழுப்புவதுமாகும். எனவே, 2022ஆம் ஆண்டுக்கான பட்ஜட் ஒதுக்கீட்டில் இருந்து இந்தத் தொழிற்சாலையின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கப்படவுள்ளது எனத்  திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில அத்துக்கோரல தெரிவித்தார். (K)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X