2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

திருமலை வைத்தியர் பிரிவுக்குள் கொரோனா

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 27 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை பொது வைத்தியசாலை வைத்தியர் இருவருக்கும், மூதூர் வைத்தியசாலை குடும்ப நல உத்தியோகத்தருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இன்று (27) உறுதி செய்யப்பட்டுள்ளதாக, திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார்

கந்தக்காடு கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு கடமை நிமித்தம் சென்றிருந்தபோது, அங்கு அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதியானது. இவ்வைத்தியர்கள் கிண்ணியா, மூதூர்  பகுதியைச் சேர்ந்த 29 வயது உடையவர்கள் எனவும் அவர் தெரிவித்தார். 

மூதூர் வைத்தியசாலையில் கடமையாற்றும் 53 வயதுடைய குடும்பநல உத்தியோகத்தருக்கு நேற்று (26) அன்டிஜென் பரிசோதனை மேற்கொண்டபோது தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X