2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

திருகோணமலை கடற் பகுதி தூய்மையாக்கல்

Princiya Dixci   / 2020 நவம்பர் 02 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ், ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ.பரீட், அ.அச்சுதன்,  எப்.முபாரக்  

கடலுக்குள் தேங்கியிருக்கும் கழிவுகளை அகற்றித் தூய்மைப்படுத்தல் வேலைத்திட்டம், கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தின் பணிப்புரைக்கு அமைய, திருகோணமலை கடற் பகுதியில் இன்று (02) நடைபெற்றது.

கிழக்கு மாகாண ஆளுநர் செயலகமும் இலங்கைக் கடற்படையினரும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த வேலைத்திட்டத்தின் போது, கடற்படையின் சுழியோடிகள் கடலுக்கு அடியில் சென்று குப்பைகளை அகற்றினர். சுமார் 50க்கும் மேற்பட்ட கடற்படை வீரர்கள் இதில் ஈடுபட்டனர். 

இதன்படி, திருகோணமலை கோணேஸ்வரர் கோவிலுக்கும் வைத்தியசாலைக்கும் இடைப்பட்ட  பிரதேசத்தின் கடல் பகுதியில் தேங்கிக் கிடந்த கழிவுகளும் அகற்றப்பட்டன. 

இந்தத் தூய்மைப்படுத்தல் வேலைத்திட்டத்தில், கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் டி.சஞ்ஞீவவும் கலந்துகொண்டார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X