2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

திருகோணமலையில் சுற்றிவளைப்பு; 37 பேர் கைது

Editorial   / 2020 ஏப்ரல் 11 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை மாவட்டத்தில், ஐந்து பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கசிப்பு உற்பத்தி, விற்பனையில் ஈடுபட்டு வந்த 37 பேரை, நேற்று (10) கைதுசெய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று காலை 6 மணி முதல் மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளிலியே, கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 37 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த மூன்று சந்தேக நபர்களையும் கைதுசெய்துள்ளதாகவும் இவர்கள் சலப்பையாறு, கும்புறுப்பிட்டி, நாவற்சோலை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் 40, 45 வயது உடையவர்கள் எனவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர். 

அத்துடன் சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த எட்டு பேரையும், சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் கசிப்பு, கோடா உற்பத்தியில் ஈடுபட்டு வந்த 21 பேரையும், நிலாவெளி பொலிஸ் பிரிவில் இரண்டு பேரையும், மொரவௌ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மூன்று பேரையும் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். 
குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸாரும் முப்படையினர் தீவிரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற வேளையில், கசிப்பு உற்பத்தி கோடா உற்பத்தி போன்ற மதுபான உற்பத்திகளில் அதிகளவிலான பொதுமக்கள் ஈடுபட்டு வருவதாகக் கிடைக்கப்பெற்றத் தகவலை அடுத்து, பொலிஸ் குழுக்களை அமைத்துள்ளதாகவும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .