2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

திருகோணமலையில் அறுவருக்கு கொரோனா

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 30 , பி.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ எம் கீத் 

திருகோணமலை மாவட்டத்தில் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று (30) உறுதி செய்யப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

மூதூர் பிரதேசத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து, அத்தொற்றாளரின் குடும்பத்தினருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போது அக்குடும்ப உறுப்பினர்களுக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுக்கதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், உப்புவெளி பிரதேசத்தில் வசிக்கும் திருகோணமலை தீயணைப்புப் பிரிவில் கடமையாற்றும் ஒருவருக்கும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்டவரின் நிலாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த உதவியாளர்   ஒருவருக்குமாக 6 பேருக்கு  கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும்  கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X