Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Princiya Dixci / 2021 மார்ச் 04 , பி.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ.பரீட், எப்.முபாரக்
45 வருடங்களுக்கு மேலாக மக்களால் பராமரிக்கப்பட்டு வந்த குச்சவெளி, ஜாயாநகர், சல்லிமுனை பகுதி குடியிருப்பு, தனியார் விவசாயக் காணிகளில், “தொல்பொருள் பகுதிக்கான அரச காணி” என, கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தால் அறிவிப்பு பலகை இடப்பட்டுள்ளமை குறித்து அப்பகுதி பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
இது தொடர்பில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்க்கு, மக்கள் முறையிட்டதை அடுத்து, அப்பகுதிக்கு நேற்று (03) விஜயம் செய்த அவர், அங்கு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடினார்.
பல வருட காலமாக மக்களுக்குச் சொந்தமான காணியை, தொல்பொருள் என்ற பேரில், அரச காணிகள் என சுவீகரிப்பு செய்ய முற்படுவது வேதனையளிப்பதாக மக்கள் தெரிவித்தனர்.
இந்தக் காணி விடயம் தொடர்பில் தீர்க்கமான முடிவைப் பெற்றுத்தருமாறும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதேவேளை, இவ்விவகாரம் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் அனுராத யகம்பத்துடன் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், ஆளுநர் அலுவலகத்தில் இன்று (04) சந்தித்துக் கலந்துரையாடினார்.
குச்சவெளி பகுதி மக்கள் எதிர்நோக்கின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆளுநரின் கவனத்துக்கு தௌபீக் எம்.பி கொண்டு சென்றார்.
இதனையத்து, இரு வாரங்களுக்குள் சம்மந்தப்பட்ட காணி உரிமையாளர்களையும் சந்தித்து இவை தொடர்பான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஆளுநர் இணக்கம் தெரிவித்துள்ளதாக தௌபீக் எம்.பி தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
50 minute ago
51 minute ago
1 hours ago