Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2022 மே 15 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர்
ஜனநாயக ரீதியான போராட்டமே வெற்றியளிக்கும் என தேசிய ஐக்கிய நல்லிணக்க முண்ணனியின் தலைவர் தேசபிமாணி சுகத் பிரசாந்த தெரிவித்தார்.
நாட்டில் ஊழலற்ற ஆட்சியை நோக்கி கொண்டு செல்வதே எல்லா மக்களதும் ஏகோபித்த எதிர்பார்ப்பாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
திருகோணமலையில் இன்று (15) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், நாட்டின் வளங்களை விற்பனை செய்து சூறையாடிய ஆட்சியாளர்களை, வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற மக்கள் போராட்டம் தொடர்கின்றது.
“மக்களுடைய போராட்டம் மூலமே மஹிந்த ராஜபக்ஷ வெளியேறிய போதும் 72 மணி நேரத்துக்குள் பிரதமர் பதவியை பொறுப்பேற்க சஜித் மற்றும் அநுர போன்றவர்கள் முன்வரவில்லை. கடந்த நல்லாட்சியில் பிரதமராக செயற்பட்ட ரணில் விக்கிரமசிங்கவே பொறுப்பேற்றார்.
“எது எவ்வாறாக இருப்பினும், டொலர் பிரச்சினை, எரிவாயு, பெற்றோல் மற்றும் டீசல் வரிசை அற்ற தேசத்தை உருவாக்கவும் எதிர்கால இளைஞர்களுக்கான தேசமாக உருவாக்கவும் பாடுபட வேண்டும் என்பதே மக்களது கோரிக்கையாக உள்ளது.
“இன, மத பேதமற்ற முறையில் நாட்டை சுபீட்சமாக்க அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளோம். நல்லதோர் ஆட்சியை எதிர்பார்க்கின்ற தேசமாக நாட்டை மிளிர வைக்க வேண்டும் என்பதே எல்லோரதும் எதிர்பார்ப்பாகும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
36 minute ago
38 minute ago
49 minute ago