Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Princiya Dixci / 2021 ஜூலை 04 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீட், அ. அச்சுதன்
வெருகல், பூநகர் பிரதேசத்தில் செளபாக்கியா உற்பத்தி கிராம வேலைத்திட்டத்தின் கீழ், கோழி வளர்ப்பை ஆரம்பிப்பதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு, வெருகல் பிரதேச செயலாளர் கே.குணனாதன் தலைமையில் நேற்று (03) நடைபெற்றது.
இதற்காக 100 பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டு, அவர்களை தொழில் முயற்சியாளர்களாக மாற்ற எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்காக, 82 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் 15,000 கோழிக்குஞ்சுகள் பயனாளிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.
கோழிவளர்ப்பிற்காக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கான அனுமதிக் கடிதத்தை, பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான கபில நுவன் அத்துக்கோரள மற்றும் மாவட்டச் செயலாளர் சமன் தர்சன பாண்டிகோரள ஆகியோர் வழங்கினர்.
இத்திட்டத்தை சிறப்பாக மேற்கொள்ளும்போது மாதமொன்றுக்கு ரூ.30,000 - ரூ.40,000 இடைப்பட்ட வருமானத்தை பெறமுடியும் என எதிர்பார்க்கின்றது.
வருமானம் குறைந்த மக்கள் அதிகமாக வாழும் இப்பிரதேசத்தில் எவ்வித வேறுபாடின்றி, அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு, பிரதேசத்தின் அவிருத்தியை மேற்கொள்ளத் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் இதன்போது தெரிவித்தார்.
மேலும், மக்கள் தமது பிரதேச அபிவிருத்தியை கருத்திற்கொண்டு, அரசாங்கத்தின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும்போது, இன்னும் பல அபிவிருத்திகளை முன்கொண்டு வர முடியுமெனறும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
53 minute ago