2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

சிறுவன் மரணம்; கடை உரிமையாளருக்கு விளக்கமறியல்

Editorial   / 2020 மே 10 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 10ஆம் கட்டை பகுதியில் மின்சார கம்பியில் சிக்கி சிறுவன் உயிரிழந்தமை தொடர்பில் கடை உரிமையாளரை, இம்மாதம் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க, இன்று (10) உத்தரவிட்டுள்ளார்.

மொரவெவ, 10ம் கட்டை, கிதுல் உதுவ பகுதியைச் சேர்ந்த டீ. ஜே.நிஷாந்த நிமால் ஐயவர்தன (39 வயது) என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது, 10ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த கவிஸ்க தெனத் சஞ்சீவ (8 வயது) எனும் சிறுவன், அவரது வீட்டுக்கு அருகிலுள்ள கடைக்கு நேற்று (09) சென்ற போது, ஊரடங்கு சட்டம் காரணமாக கடை மூடப்பட்டிருந்தது.

கடையைச் சுற்றி யானை மின் வேலிகள் போடப்பட்டிருந்த நிலையில், கடை உரிமையாளர், மின்சார சபைக்கு சொந்தமான மின்சாரத்தை, அந்த யானை மின்வேலியில் திருட்டுத்தனமாக கடைக்கு பொருத்தியிருந்தமையால் அதில் சிக்குண்டு சிறுவர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டு, இன்றையதினம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே, மேற்படி விளக்கமறியவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .