2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

சிறுமி துஷ்பிரயோகம்; தந்தைக்கு விளக்கமறியல்

Editorial   / 2021 ஒக்டோபர் 03 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக் 

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பைசல் நகர் பகுதியில் 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், அச்சிறுமியின் தந்தையை, இம்மாதம் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் சுபாஷினி சித்திரவேல், நேற்று (02) உத்தரவிட்டார். 

பைசல் நகர் பகுதியைச் சேர்ந்த 38 வயது குடும்பஸ்தரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சிறுமியின் தாய், வேலை வாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளமையால், தாயின் தங்கையின் வீட்டில் சிறுமி வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், மதுபோதையில் வருகை தந்த சிறுமியின் தந்தை அவருடைய வீட்டுக்கு சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரைக் கைது செய்து கிண்ணியா பொலிஸார், திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் சந்தேகநபரை ஆஜர்படுத்திய போதே, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சிறுமி தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .