2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

சிறுமி துஷ்பிரயோக முயற்சி; பொலிஸ் உத்தியோகத்தர் கைது

Princiya Dixci   / 2021 மார்ச் 07 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக் 

நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாடசாலை சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற குற்றச்சாட்டுக்காக நிலாவெளி பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர். 

நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் 13 வயதுச் சிறுமியின் தாயார் செய்த  முறைப்பாட்டின் அடிப்படையில் 35 வயதுடைய இந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபர் சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .