2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

சிறுநீரக சிகிச்சைப் பிரிவை ஏற்படுத்த கோரிக்கை

Editorial   / 2020 மே 19 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், கீத்

திருகோணமலை மாவட்ட வைத்தியசாலைகளில் சிறுநீரக சிகிச்சை பிரிவு இல்லாததால், அங்கு வரும் சிறுநீரக நோயாளிகள், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு, அநுராதபுரம் வைத்தியசாலைகளுக்கு மாற்றப்படுகின்றனர்.

திருகோணமலை மாவட்டத்தில் மத்திய அரசின் கீழ், திருகோணமலை தள வைத்தியசாலை, கந்தளாய் ஆதார வைத்தியசாலை என்பனவும், மாகாண சபையின் கீழ், பிரதானமாக மூதூர், கிண்ணியா ஆதார வைத்தியசாலைகளும் இயங்குகின்றன.

ஆயினும், இவற்றில் ஒன்றில்கூட சிறுநீரக சிகிச்சை பிரிவு இல்லை, அதனால் விசேட வைத்திய நிபுணரும் இல்லை.

திருகோணமலை வடக்கு பிரதேசங்களில் ஏராளமான சிறுநீரக நோயாளர்கள் உள்ள நிலையில், இதுவரை இப்பிரிவு இங்கு ஏற்படுத்தப்படாதமை குறித்து பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .