2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

‘கொவிட்-19 வைரஸை எதிர்கொள்ள கிழக்கு மாகாணம் தயார்’

Editorial   / 2020 மார்ச் 19 , பி.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.கீத்

கொவிட்-19 எனும் வைரஸை எதிர்கொள்ள கிழக்கு மாகாணம் தயார் நிலையில் உள்ளதாக, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் தெரிவித்தார்.

குறித்த வைரஸ் நோய் தொற்றிலிருந்து கிழக்கு மாகாண மக்களைப் பாதுக்காப்பது தொடர்பான ஊடக சந்திப்பின் போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “இத்தாலி, கொரியா நாடுகளிலிருந்து இம்மாதம் 10 திகதியிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த 693 பேர், பெற்றி கம்பஸில் தங்கவைக்கபட்டு, கண்காணிக்கபடுகின்றார்கள்” என்றார்

கிழக்கு மாகாணத்தில் இனங்கானப்பட்ட முதலாவது நோயாளி, தற்போது கொழும்பு, ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் எனக் கூறிய ஆளுநர், அவருடன் பழகிய கிட்டத்தட்ட53 நபர்களை தயவுசெய்து அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்று உங்களுக்கும் நோய்த் தொற்றுள்ளதாக என்பது தொடர்பில் பரிசோதனையை மேற்கொள்ளுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.  

கொரோனா வைரஸ் குறித்து பயம்கொள்ளவேண்டாமென்றும் இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தத் தவறுவோமானால் நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.

பொதுமக்கள், வெளிநாட்டவர்கள் குறித்து அவதானமாக இருக்க வேண்டுமென்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் நோய்த் தொற்று குறித்து சுய பரிசோதனை செய்துகொள்ளவேண்டுமென வலியுறுத்திய கிழக்கு மாகாண ஆளுநர், ஒவ்வொருவரும் தங்களின் பாதுகாப்பை உறுதிகொள்ளவேண்டுமென்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .