2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

கொரோனா தடுப்பு நடவடிக்கை; சம இடைவெளிக்கான கோடுகள் வரைவு

Editorial   / 2020 ஏப்ரல் 05 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்   

கொரோனா வைரஸ் பரவலிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கில், திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், மக்கள் கூடும் பொதுஇடங்களில், சம இடைவெளிக்கான கோடுகள் வரையும் பணிகள், இன்று(5) கந்தளாயில் முன்னெடுக்கப்பட்டன.

கந்தளாய் பிராந்திய சிவில் பாதுகாப்புப் படையினரும் கந்தளாய் வாழ் இளைஞர்களும் இணைந்து, இந்த சம இடைவெளிகளைப் பேணும் வகையிலான கோடுகள் வரையும் செயற்பாடுகளை மேற்கொண்டார்கள்.

கந்தளாயில் உள்ள பொதுஇடங்களான வங்கிகள், சந்தை கட்டத் தொகுதி, மருந்தகங்கள், பொருள்;கள் கொள்வனவு செய்யும் மொத்த வியாபார நிலையங்கள் அனைத்திலும், கொரொனா வைரஸிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு ஒவ்வொரு நிறங்களிலும் கோடுகள் வரையப்பட்டன.

இதில் சிவில் பாதுகாப்பு பிராந்திய உயர் அதிகாரிகள், இளைஞர்களும் கலந்துகொண்டனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .